செய்திகள்

கடலூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் என்.எல்.சி.ஊழியர் பலி

Published On 2018-09-01 15:17 IST   |   Update On 2018-09-01 15:17:00 IST
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் என்.எல்.சி. ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த மீனாட்சிபேட்டையை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 27). நெய்வேலி என்.எல்.சி.யில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இவர் நேற்று இரவு வேலையை முடித்து விட்டு நெய்வேலியில் இருந்து மீனாட்சிபேட்டைக்கு தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். கடலூர் அருகே உள்ள பெத்தான்குப்பம் பகுதியில் வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது. ரோட்டில் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மின்கம்பம் மீது மோதியது.

இதில் தூக்கிவீசப்பட்ட ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News