செய்திகள்

அமைந்தகரை அழகு நிலைய பெண்ணை தாக்கி நகை-பணம் பறிப்பு

Published On 2018-09-01 14:37 IST   |   Update On 2018-09-01 14:37:00 IST
அமைந்தகரையில் அழகு நிலையத்தை நடத்தி வரும் பெண்ணை தாக்கி நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
சென்னை:

அமைந்தகரை மேத்தா நகர் ராஜேஸ்வரி தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கேஸ்வரி. அழகு நிலையம் நடத்தி வருகிறார்.

நேற்று இரவு 10.30 மணிக்கு அழகு நிலையத்தை பூட்டிவிட்டு மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மேத்தா நகர் மெயின் ரோட்டில் சென்ற போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ராமலிங்கேஸ்வரி வந்த மொபட்டின் மீது மோதினர்.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ராமலிங்கேஸ்வரியிடம் இருந்த கைப்பையை மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு சென்றனர். அந்த பையில் 6 சவரன் நகை 14ஆயிரம் பணம் மற்றும் 2 விலை உயர்ந்த ஐபோன் ஆகியவை இருந்தது.

கொள்ளையர்கள் தள்ளி விட்டதில் ராமலிங்கேஸ்வரிக்கு முகம் மற்றும் உதடு பகுதியில் காயம் ஏற்பட்டது. அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து அமைந்தகரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News