செய்திகள்

தெற்கில் உதிக்கும் சூரியன் - அகில இந்திய தலைவர்கள் பங்கேற்ற கருணாநிதி புகழஞ்சலி கூட்டம் தொடங்கியது

Published On 2018-08-30 12:23 GMT   |   Update On 2018-08-30 12:23 GMT
திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் புகழஞ்சலி கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. #KarunanidhiCondolenceMeeting
சென்னை:

திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த 7-ம் தேதி வயோதிகம் காரணமாக சென்னையில் காலமானார்.
                
அவரது மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நினைவேந்தல் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. திருச்சி, மதுரை, கோவை, நெல்லை ஆகிய இடங்களில் புகழஞ்சலி கூட்டங்கள் நடந்தன.

இதையடுத்து, தெற்கில் உதிக்கும் சூரியன் என்ற தலைப்பில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்கும் புகழஞ்சலி கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்திற்கு திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்குகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்.

இந்த புகழஞ்சலி கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, பாஜக சார்பில் மத்திய மந்திரி நிதின் கட்காரி, தேசிய செயலாளர் முரளிதரராவ், காங்கிரஸ் கட்சி சார்பில் குலாம்நபி ஆசாத் எம்.பி., தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார், புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.சுதாகர்ரெட்டி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் உள்பட பலர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் விதமாக சிறப்புரையாற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #KarunanidhiCondolenceMeeting
Tags:    

Similar News