செய்திகள்

சேத்துப்பட்டில் மின்சார ரெயிலில் அடிபட்டு 2 வாலிபர்கள் பலி

Published On 2018-08-30 09:09 GMT   |   Update On 2018-08-30 09:10 GMT
எழும்பூருக்கும்-சேத்துப்பட்டிற்கும் இடையே தண்டவாளத்தை கடந்த போது ரெயிலில் சிக்கி 2 வாலிபர்கள் பலியாகினர். ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #TrainAccident
சென்னை:

மின்சார ரெயிலில் அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக அதிகமாக இருந்தன.

கடந்த மாதம் பரங்கிமலை நிலையத்தில் ரெயிலில் தொங்கி பயணம் செய்த பயணிகள் 5 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

தடுப்பு சுவரில் மோதி கீழே விழுந்ததில் உடல் சிதறி பலியானார்கள். 5 பேர் படுகாயத்துடன் உயிர் தப்பினர். இந்த சம்பவத்திற்கு பிறகு ரெயில்கள் அடிக்கடி விபத்து ஏற்படக்கூடிய இடங்களில் மெதுவாக இயக்கப்பட்டது.

ஒரு மாதமாக கடற்கரை-தாம்பரம் இடையே ரெயில் விபத்து குறைந்த நிலையில் இன்று மீண்டும் ரெயிலில் அடிபட்டு 2 பேர் பலியானார்கள்.

எழும்பூருக்கும்-சேத்துப்பட்டிற்கும் இடையே தண்டவாளத்தை கடந்த போது ரெயிலில் சிக்கி பரிதாபமாக உயிர் இழந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் எழும்பூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடம் சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அவர்களது சட்டை பாக்கெட்டில் இருந்த முகவரி மற்றும் செல்போன் மூலம் உடனடியாக அடையாளம் தெரிந்தது.

சென்னை சாஸ்திரி நகரைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் கிஷோர் குமார் (27), முத்து என்பவரின் மகன் முனிவேல் (23) ஆகியோர் என தெரிய வந்தது.

கடற்கரையில் இருந்து தாம்பரம் சென்ற மின்சார ரெயிலில் அடிபட்டு இறந்த இருவரின் உடலும் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

எழும்பூர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ரோஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #TrainAccident

Tags:    

Similar News