செய்திகள்
ஆனைக்கட்டி சாலையில் நின்ற காட்டு யானை.

ஆனைகட்டியில் சாலையை கடக்க முயன்ற காட்டு யானையால் - போக்குவரத்து பாதிப்பு

Published On 2018-08-28 11:24 GMT   |   Update On 2018-08-28 11:24 GMT
கோவையில் இருந்து ஆனைகட்டி செல்லும் மலைப்பகுதியில் ஒற்றை யானை சாலையை கடக்க நின்றது. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கவுண்டம்பாளையம்:

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் வசித்து வருகின்றன. அவைகள் அவ்வப்போது மலைப்பகுதிக்கு அருகிலுள்ள ஊருக்குள் புகுந்து வீடு, விளை நிலங்களை சேதம் செய்து வருகின்றன. சில சமயங்களில் உயிர் சேதமும் ஏற்பட்டு விடுகிறது.

இதற்காக வனத்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அதனையும் மீறி யானைகள் வருவது குறையவில்லை. கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் காட்டு யானை ஒன்று அந்த பகுதியில் ஊருக்குள் புகுந்து வீடுகளை இடித்தும், அரிசி பருப்புகளை தின்றும் வருகிறது. இது குறித்து ஆதிவாசி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் கோவையில் இருந்து ஆனைகட்டி செல்லும் மலைப்பகுதியில் ஒற்றை யானை சாலையை கடக்க நின்றது. அப்போது போக்குவரத்து அதிகமாக இருந்ததால் யானை சாலையை கடக்காமல் மலைப்பகுதிக்குள் திரும்பி சென்றது. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த யானையை உடனடியாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க ஆதிவாசி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News