செய்திகள்

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் பணி அனுமதி காலம் முடிந்தும் பணியில் நீடிக்கும் பெண் அதிகாரி

Published On 2018-08-28 10:17 GMT   |   Update On 2018-08-28 10:17 GMT
கோவில் கண்காணிப்பாளர் பணியில் 3 ஆண்டுகள் மட்டுமே எந்த அதிகாரியும் பணியாற்ற முடியும். ஆனால் உமாதேவி நியமிக்கப்பட்டு கடந்த ஜூன் மாதத்தோடு 3 ஆண்டு காலம் நிறைவு பெற்றும் தற்போது வரை அந்த பணியில் அவர் தொடர்ந்து வருகிறார்.

சேலம்:

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் கண்காணிப் பாளராக பணியாற்றி வருபவர் உமாதேவி. 3 ஆண்டுகளுக்கு முன்பு இவர் இந்த பணியில் நியமிக்கப்பட்டார்.

கோவில் கண்காணிப்பாளர் பணியில் 3 ஆண்டுகள் மட்டுமே எந்த அதிகாரியும் பணியாற்ற முடியும். ஆனால் உமாதேவி நியமிக்கப்பட்டு கடந்த ஜூன் மாதத்தோடு 3 ஆண்டு காலம் நிறைவு பெற்றும் தற்போது வரை அந்த பணியில் அவர் தொடர்ந்து வருகிறார்.

இது குறித்து கோவில் உதவி கமி‌ஷனர் தமிழரசு சேலம் மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் வரதராஜனுக்கும் அறிக்கை அனுப்பியுள்ளதாகவும் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து சேலம் மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் வரதராஜனிடம் கேட்ட போது, உமாதேவியின் பணி அனுமதி காலம் முடிந்து 2 மாதம் ஆகிறது. இதில் நான் எந்த முடிவும் எடுக்க முடியாது. இந்து அறநிலைய துறை ஆணையர் தான் அவரை வேறு பணிக்கு மாற்றுவது குறித்து முடிவு எடுக்க வேண்டும். இது தொடர்பாக அவருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

ஏற்கனவே உமாதேவி சுகவனேஸ்வரர் கோவில் கண்காணிப்பாளாராக இருந்து சேலம் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் மீண்டும் கடந்த 2016-ம் ஆண்டு கோவில் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News