செய்திகள்
புரசைவாக்கம்-சூளை சந்திப்பில் மெட்ரோரெயில் பாதை ஆய்வு பணி தொடங்கியதற்காக அங்கு அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டது

புரசைவாக்கம்-சூளை சந்திப்பில் மெட்ரோ ரெயில் ஆய்வுப் பணி

Published On 2018-08-28 10:04 GMT   |   Update On 2018-08-28 10:04 GMT
புரசைவாக்கம்-சூளை சந்திப்பிலும் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான ஆய்வு பணி தொடங்கியுள்ளது. ஆய்வு பணி முடிந்த பிறகு சுரங்கம் தோண்டும் சேவை தொடங்கும். #MetroTrain
பெரம்பூர்:

சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

மாதவரம்-சிறுசேரி இடையே மெட்ரோ ரெயிலில் செல்வதற்கான புதிய வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி மாதவரத்தில் இருந்து மூலக்கடை, பெரம்பூர், அயனாவரம், ஓட்டேரி, பட்டாளம், புரசைவாக்கம், கெல்லீஸ் வழியாக சிறுசேரி வரை மெட்ரோ ரெயில் சுரங்கம் தோண்டப்படுகிறது.

ரூ.88 ஆயிரம் கோடி செலவில் இந்த மெட்ரோ ரெயில் பாதையில், முக்கிய ரெயில் நிலையங்கள் அமைய உள்ளன. இதில் புரசைவாக்கம், பெரம்பூர், அயனாவரம் முக்கியமானவை.

இந்த மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான ஆய்வு பணிகள் மாதவரத்தில் இருந்து சிறுசேரி வரை அமைய இருக்கும் பகுதிகளில் நடந்து வருகிறது. இதில் மண்ணின் தன்மை, சுரங்கப்பாதை அமைக்கும் இடத்தின் தன்மை ஆகியவை குறித்து கண்டறியப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக புரசைவாக்கம்-சூளை சந்திப்பிலும் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான ஆய்வு பணி தொடங்கியுள்ளது. இதையொட்டி, அங்கு அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆய்வு பணி முடிந்த பிறகு சுரங்கம் தோண்டும் சேவை தொடங்கும். #MetroTrain
Tags:    

Similar News