செய்திகள்

தூத்துக்குடியில் உதவித்தொகை பெற முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

Published On 2018-08-25 16:40 IST   |   Update On 2018-08-25 16:40:00 IST
தூத்துக்குடியில் உதவித்தொகை பெற முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

தூத்துக்குடி:

தூத்துக்குடி கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய முப்படைவீரர் வாரியம் மூலம் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெற அலுவலர் நிலைக்கு குறைவான தரத்தில் பணியாற்றிய முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்.

கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் பிரதமரின் கல்வி உதவித் திட்டத்தில் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பிளஸ்-2 வகுப்பில் 60 சதவீத மதிப் பெண்கள் அல்லது அதற்கு அதிகமாக பெற்று, தேர்ச்சி பெற்று, தொழிற்படிப்பு படிக்கும் முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் மட்டும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

தகுதியானவர்கள் வருகிற நவம்பர் மாதம் 15-ந்தேதிக்குள் www.ksb.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து, பதிவிறக்கம் செய்து அனைத்து அசல் ஆவணங்களுடன் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனரை நேரிலோ அல்லது 04612321678 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News