செய்திகள்

கடலோர மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்

Published On 2018-08-25 08:10 GMT   |   Update On 2018-08-25 08:10 GMT
மேலடுக்கு சுழற்சி அதிக வலுவுடன் உள்ளதால் தமிழ்நாடு, புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #ChennaiRains
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி நிருபர்களிடம் கூறியதாவது:-

வங்க கடலில் நிலவிய மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று பல இடங்களில் மழை பெய்தது. வட மாவட்டங்களில் ஒருசில பகுதிகளில் மழை காணப்பட்டது.

இந்த மேலடுக்கு சுழற்சி இன்று அதிக வலுவுடன் உள்ளதால் தமிழ்நாடு, புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. மற்ற இடங்களில் பரவலாக மழை பெய்யும். சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இன்று காலை 8.30 மணியுடன் கூடிய 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்புவனத்தில் (சிவகங்கை) 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கரூரில் 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.



நாகை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், தஞ்சை, நாமக்கல், வேலூர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, நீலகிரி மாவட்டங்களில் பரவலாக 1 முதல் 3 செ.மீ. வரை மழை பெய்துள்ளது.

செங்கல்பட்டில் 5 செ.மீ., மகாபலிபுரத்தில் 2 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #ChennaiRains
Tags:    

Similar News