செய்திகள்

யானைகள் வழித்தடத்தில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யாத 10 ரிசார்ட்டுகளுக்கு சீல்

Published On 2018-08-24 10:53 GMT   |   Update On 2018-08-24 10:53 GMT
மாயார் வழித்தடத்தில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யாத 10 ரிசார்ட்டுகளுக்கு நோட்டீஸ் வழங்கி சீல் வைக்கப்பட உள்ளது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடங்கள் தொடர்பான வழக்கில் மாயார் யானைகள் வழித்தடத்திலுள்ள 39 ரிசார்ட்டுகளை முதல் கட்டமாக மூடி சீல் வைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டது. இதில் மசினகுடியில் உள்ள 12 ரிசார்ட்டுகளின் உரிமையாளர்கள் தங்களிடம் ஆவணம் உள்ளதாக தெரிவித்ததால் அதனை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்பிக்குமாறு கோர்ட்டு உத்தரவிட்டது.மீதமுள்ள 27 ரிசார்ட்டு களுக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு படி 12 ரிசார்ட்டுகளின் உரிமையாளர்கள் தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்ததில் முறையான அனுமதி பெற்றதற்கான ஆவணங்கள் குறைந்த அளவே இருந்தது.மேலும் சில ஆவணங் களை கூடுதலாக அளிப்பதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர். அவர்களுக்கு நேற்று மாலை வரை அவகாசம் அளிக்கப்பட்டது. அவகாசம் முடிந்ததால் 10 ரிசார்ட்டுகளுக்கும் சீல் வைக்கப்படும் என தெரிகிறது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் இன்ன சென்ட் திவ்யா கூறும் போது, மாயார் வழித் தடத்திலுள்ள 39 ரிசார்ட்டுகளில் 27 ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்கப்பட்டு விட்டது.

12 ரிசார்ட்டுகளின் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு வந்தது. இதில் 10 ரிசார்ட்டுகளின் ஆவணங்கள் முறையாக இல்லாததால் அவற்றை காலி செய்ய இன்று (வெள்ளிக்கிழமை) நோட்டீஸ் அனுப்பப்படும்.

இந்த ரிசார்ட்டுகளுக்கு நாளை சீல் வைக்கப்படும். மற்ற 2 ரிசார்ட்டுகளின் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு வருகிறது என்றார். #tamilnews
Tags:    

Similar News