செய்திகள்

கடையம் பகுதியை கலக்கிய கொள்ளையன் கைது- 70 கிராம் நகைகள் பறிமுதல்

Published On 2018-08-22 20:08 IST   |   Update On 2018-08-22 20:08:00 IST
கடையம் அருகே பூட்டிய வீடுகளை நோட்ட மிட்டு திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 70 கிராம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடையம்:

ஆலங்குளம் அருகே கடையம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட குத்தப்பாஞ்சான் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடந்தன. மர்ம நபர் பூட்டிய வீடுகளை நோட்ட மிட்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தான். 

குத்தப்பாஞ்சானில் உள்ள சுப்பிரமணியன் என்பவரது வீட்டில் 10 கிராம் நகை, அந்தோணிராஜ் என்பவரது வீட்டில் 14 கிராம் நகை, பானுபிரியா, அர்ச்சுனன் ஆகியோரது வீடுகளிலும் நகைகள் திருட்டு போனது. இது தொடர்பாக கடையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் தனிப்படை போலீசார் நேற்று கடையம் சுற்றுவட்டார பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் நாலாங்கட்டளையை அடுத்த வேலாயுதசாமி குடியிருப்பை சேர்ந்த சுடலைவடிவேலன் (40) என்பதும், குத்தப்பஞ்சான் பகுதியில் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து சுடலை வடிவேலனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 70 கிராம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 
Tags:    

Similar News