செய்திகள்

காரியாபட்டி யூனியன் அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை- 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரிக்கை

Published On 2018-08-21 09:53 GMT   |   Update On 2018-08-21 09:53 GMT
100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கேட்டு காரியாபட்டி யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
காரியாபட்டி:

காரியாபட்டி அருகே கம்பிக்குடி ஊராட்சியைச் சேர்ந்த கஞ்சமநாயக்கன் பட்டி, கம்பிக்குடி, மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் எனக்கேட்டு காரியாபட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

யூனியன் ஆணையாளர் கதிரேசனை சந்தித்து தங்களது கோரிக்கையினை தெரிவித்தனர். அப்போது கிராமத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் வேலை வழங்கப்படும் என ஆணையாளர் உறுதி அளித்தார்.

மேலும் நூறு நாள் வேலை திட்டத்தில் மரக்கன்று நடுதல், பன்னைக்குட்டை அமைத்தல், தனியார் இடங்களில் வரப்பு தடுத்தல் போன்ற பணிகளும் எடுத்து செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் 5 விவசாயிகளிடம் கருத்துக்களை கேட்டு அந்த விவசாயிகள் கிராமத்திற்கு தேவையான பணிகள் என்ன உள்ளது என கருத்து கேட்டு அதன் படி அந்த வேலைகளுக்கு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று நூறு நாள் வேலை திட்டத்தில் எடுத்து செய்யப்படும் என்று முற்றுகையிட்ட பெண்களிடம் தெரிவித்தார்.

சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன், யோகேஸ் குமார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். யூனியன் ஆணையாளர் கதிரேசன் அனைவருக்கும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தவுடன் பெண்கள் அனைவரும் கலைந்து சென்றனர். #tamilnews
Tags:    

Similar News