செய்திகள்

பவானி ஆற்றின் வேகம் தணிந்தது - இயல்பு வாழ்க்கை திரும்பியது

Published On 2018-08-20 09:12 GMT   |   Update On 2018-08-20 09:12 GMT
பவானி ஆற்று தண்ணீரின் வேகம் குறைந்திருப்பதால் மக்கள் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளனர்.
சத்தியமங்கலம்:

நீலகிரி மற்றும் கேரள மாநில வனப்பகுதியில் கொட்டிய மழையால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் அதிகளவில் வந்து கொண்டிருந்தது.

இதனால் அணை கடந்த 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிரம்பியது. வரலாறு காணாத வகையில் அணையில் இருந்து 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனால் பவானி ஆற்றில் வெள்ளம் சீற்றம் ஏற்பட்டது. சத்தியமங்கலம், கோபி, கொடிவேரி, அரசூர் ஆகிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. 500 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பவானி கரையோரப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது.

இதனால் வெள்ளத்தால் பாதுகாப்பான இடத்துக்கு சென்ற மக்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். தண்ணீர் வீட்டுக்குள் புகுந்ததால் வீட்டில் உள்ள பொருட்கள் யாவும் நனைந்து விட்டது. நேற்று முதல் இந்த பொருட்களை பாதிக்கப்பட்ட மக்கள் காய வைத்து வருகிறார்கள்.

மேலும் பல வீடுகளில் மாணவ-மாணவிகளின் புத்தகப் பைகளும், நோட்டு புத்தகங்களும் முழுவதும் நனைந்து விட்டன. இதையும் மாணவர்கள் காய வைத்து வருகிறார்கள்.

எனவே பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களுக்கு புதிய பாட புத்தகங்கள் வழங்க வேண்டும் என வேண்டுகோளும் விடுத்துள்ளனர்.

70 ஆயிரம், 50 ஆயிரம், 40 ஆயிரம் கன அடி தண்ணீர் என பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று காலை 12700 ஆயிரம் கன அடி வீதம் மட்டும் திறந்து விடப்பட்டது.

ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைந்தாலும் பவானி கரையோரப்பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News