செய்திகள்

கேரள மக்களுக்கு விருதுநகர்-ராமநாதபுரத்தில் இருந்து நிவாரண பொருட்கள்

Published On 2018-08-17 16:21 GMT   |   Update On 2018-08-17 16:21 GMT
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு விருதுநகர்-ராமநாதபுரத்தில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. #keralarain

ராமநாதபுரம்:

கேரளாவில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ளத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் சார்பில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு வியாபார சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் சேகரிக்கப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

நிவாரணப் பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனத்தை கலெக்டர் நடராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிவாரணப் பொருட்கள் அனைத்தும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் செயல்பட்டு வரும் வெள்ள நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு பிரிவில் சேர்க்கப்பட உள்ளது.


இதேபோல் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, கோதுமை, பால் பவுடர் மற்றும் ரூ.5ம லட்சம் மதிப்பிலான அத்தியாவசியப்பொருட்கள் லாரி மூலம் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கலெக்டர் சிவஞானம் கொடியசைத்து அந்த வாகனத்தை அனுப்பி வைத்தார். #keralarain

Tags:    

Similar News