செய்திகள்

நல்லம்பள்ளியில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம்

Published On 2018-08-15 23:51 IST   |   Update On 2018-08-15 23:52:00 IST
நல்லம்பள்ளி தாசில்தார் அலுவலகத்தில், வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி தாசில்தார் அலுவலகத்தில், வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தர்மபுரி உதவி கலெக்டர் சிவனருள் தலைமை தாங்கினார். தாசில்தார் பழனியம்மாள், தனி தாசில்தார்கள் சரவணன், குமரன், மாதேஸ், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உதவி கலெக்டர் பேசுகையில், இ சேவை, மக்கள் கணினி மையம், கூட்டுறவு கடன் சங்க இ சேவை ஆகிய மையங்களில் இருந்து இருப்பிட சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் பெறுவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, குறிப்பிட்ட நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விண்ணப்பத்தை சரிபார்த்து சான்றிதழ்கள் வழங்க வேண்டும். நில அளவை தொடர்பான கோப்புகள் தேங்காமல், மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி மனுதாரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என்று கூறினார். 
Tags:    

Similar News