செய்திகள்

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2018-08-15 16:52 GMT   |   Update On 2018-08-15 16:52 GMT
ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரி, ஈஞ்சம்பள்ளி பி.கே.பி. சாமி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மற்றும் விவேகானந்தா ரத்த தான இயக்கம் ஆகியவற்றின் சார்பில் மொடக்குறிச்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
மொடக்குறிச்சி:

ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரி, ஈஞ்சம்பள்ளி பி.கே.பி. சாமி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மற்றும் விவேகானந்தா ரத்த தான இயக்கம் ஆகியவற்றின் சார்பில் மொடக்குறிச்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை கொடி அசைத்து மொடக்குறிச்சி பேரூராட்சி செயல் அதிகாரி டார்த்தி தொடங்கி வைத்தார்.

பி.கே.பி.சாமி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி நிர்வாக அதிகாரி லட்சுமணன், முதல்வர் வைஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மொடக்குறிச்சி நால்ரோட்டில் தொடங்கிய இந்த ஊர்வலம் ஒன்றிய அலுவலகம், ஈஸ்வரன் கோவில் வீதி, மாரியம்மன் கோவில் வீதி, போலீஸ் நிலையம் உள்பட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நால்ரோட்டில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த பதாகைகளை மாணவ- மாணவிகள் கையில் ஏந்தியபடி சென்றனர்.

இதில் வேளாளர் மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் லலிதா, செல்வி, கவிதா, சுகன்யா, விவேகானந்தா ரத்த தான இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், ஆசிரிய, ஆசிரியைகள், பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News