செய்திகள்

சென்னை விமானநிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 3 பைகளால் வெடிகுண்டு பீதி

Published On 2018-08-14 15:28 IST   |   Update On 2018-08-14 15:28:00 IST
சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 3 பைகளால் வெடிகுண்டு பீதி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமானங்கள் புறப்பாடு பகுதியில் 2-வது நம்பர் கேட் அருகே 3 துணிப்பைகள் கேட்பாரற்று கிடந்தன.

நீண்ட நேரமாக அங்கு கிடந்ததால் அதில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விமான நிலைய தொழில் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

போலீஸ் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் துணிப்பை பரிசோதிக்கப்பட்டது. அதில் வெடிகுண்டு இல்லை. ஆனால் பயன்படுத்தும் பழைய ஆடைகள் மட்டுமே இருந்தன.

இதற்கிடையே அங்கு 3 வாலிபர்கள் வந்தனர். மேற்கு வங்காளத்தை சேர்ந்த அவர்கள் கொல்கத்தா செல்ல நேற்று இரவே இங்கு வந்து தங்கியிருந்ததாக கூறினர். டீ குடிக்க சென்ற போது தங்களது பைகளை இங்கு வைத்து சென்றதாக தெரிவித்தனர். எனவே அவர்களை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினர்.

பைகள் கிடந்த பகுதியில் போலீசார் யாரையும் நடமாட விடவில்லை. பலத்த கெடுபிடி செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News