செய்திகள்

மொடக்குறிச்சி அருகே குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்

Published On 2018-08-13 15:54 GMT   |   Update On 2018-08-13 15:54 GMT
ஈரோடு-முத்தூர் சாலையில் காவிரிக்குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சரிசெய்யாததால் குடிநீர் வீணாக சாக்கடையில் செல்கிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மொடக்குறிச்சி:

மொடக்குறிச்சி அடுத்த அய்யகவுண்டன்பாளையம் குரங்கன் ஓடை அருகே செல்லாத்தாபாளையம் பிரிவு பேரூந்து நிறுத்தம் பகுதியில் கடந்த 10நாள்களாக காவிரிக்குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக அருகில் சாக்கடையில் சென்று கலக்கிறது.

இக்குடிநீர் குழாய் மூலமாக அய்யகவுண்டன் பாளையம், செல்லாத்தாபாளையம், பாலிக்காடு, வேலம் பாளையம் உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு காவிரியாற்று குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த குழாய் உடைப்பு காரணமாக மேற்கண்ட ஊர்களில் சரிவர தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் தெரிவித்தபோது, காவிரி குடிநீர் இணைப்புகளை குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள்தான் சரி செய்யவேண்டும் என்றும், அவர்கள் தற்போது காவிரியாற்றில் தண்ணீர் அதிகமாக வருவதால் தற்போது அங்கு பணியில் உள்ளனர். இதனால் தற்போது இதை சரிசெய்ய இயலாது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

எனவே சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடனடியாக உடைப்பை சரிசெய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News