செய்திகள்

பறவைகள் சரணாலயம் அருகே மணல் திருட்டை தடுக்க வேண்டும் - கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

Published On 2018-08-13 11:21 GMT   |   Update On 2018-08-13 11:21 GMT
பறவைகள் சரணாலயம் அருகேயுள்ள கண்மாயில் மணல் திருட்டை தடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கிராம மக்கள் புகார் மனு கொடுத்துள்ளனர்.

மதுரை:

பறவைகள் சரணாலயம் அருகேயுள்ள கண்மாயில் மணல் திருட்டை தடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கிராம மக்கள் புகார் மனு கொடுத்துள்ளனர்.

கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. கலெக்டர் வீரராகவராவ் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அவரிடம் திருமங்கலம் அருகேயுள்ள பேரையூர், சாத்தூர், எழுமலை கிராம மக்கள் புகார் மனு கொடுத்தனர்.

அதில் பேரையூர் அருகேயுள்ள எழுமலையில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இதன் அருகேயுள்ள கண்மாயில் மணல் திருட்டு நடைபெறுவதாக பேரையூர் தாசில்தாரிடம் புகார் மனு கொடுத்தோம். எங்கள் புகார் மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நடவடிக்கை எடுக்காத தாசில்தார் மீது நடவடிக்கை எடுப்பதோடு மணல் திருட்டையும் தடுக்க வேண்டுகிறோம்.

மேற்கண்டவாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News