செய்திகள்

சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் - கலெக்டர் உத்தரவு

Published On 2018-08-11 11:53 GMT   |   Update On 2018-08-11 11:53 GMT
சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர்:

வரும் 15-ந் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வேலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வரும் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று காலை 11 மணிக்கு தவறாமல் கிராம சபை கூட்டங்கள் கூட்டப்பட வேண்டும்.

இக்கிராம சபைக் கூட்டத்தில் பிளாஸ்டிக் உற்பத்தி தடை செய்தல், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், கடந்த மே 1-ந் தேதி முதல் ஜூலை 31-ந் தேதி முடிய கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், திடக்கழிவு மேலாண்மை திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பணிகளின் விவரம் மற்றும் 2018-19ம் ஆண்டுக்கான தொழிலாளர் வரவு-செலவு திட்டம்.

பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள சாலைப்பணிகள், உயர்மட்ட பாலங்கள் மற்றும் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தில் பணிகள் தேர்வு செய்து பார்வைக்கு வைத்தல், நியாய விலை கடைகளின் கணக்குகளை சமூக தணிக்கைக்கு உட்படுத்துதல் உட்பட பல்வேறு பொருள்கள் விவாதிக்கப்பட உள்ளது.

இந்த கிராம சபைக் கூட்டங்களில் தாசில்தார் களை பார்வை யாளர்களாக கலந்து கொண்டு, கிராம சபைக்கூட்டம் நடை பெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்து உத்தர விடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News