செய்திகள்
ஜமீன்குளத்தூர் திரவுபதி அம்மன் கோவில் அருகே பழமையான மரம் முறிந்து விழுந்ததை படத்தில் காணலாம்.

ஜெயங்கொண்டத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை

Published On 2018-08-11 10:52 GMT   |   Update On 2018-08-11 10:52 GMT
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று மாலை முதல் இரவு வரை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று மாலை முதல் இரவு வரை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியது. சூறாவளி காற்றால் ஜமீன்குளத்தூர் திரவுபதி அம்மன் கோவில் அருகே இருந்த 120 வருட பழமையான மரம் முறிந்து விழுந்தது.

அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வெயில் அடித்த போதிலும் ஜெயங்கொண்டம் பகுதியில் மட்டும் நேற்று பலத்த மழை பெய்தது. குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவியதால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 
Tags:    

Similar News