செய்திகள்

கோபியில் டாஸ்மாக் ஊழியர்களுடன் தகராறு 2 பேர் கைது

Published On 2018-08-10 10:26 GMT   |   Update On 2018-08-10 11:56 GMT
கோபியில் டாஸ்மாக் ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டது தொடர்பாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
கோபி:

கோபி பாரியூர் ரோட்டில் உள்ள அரசு டாஸ்மாக மதுக்கடை உள்ளது. இங்கு சூப்பர் வைசராக பணி புரிபவர் ஜோதிலிங்கம் (வயது 43).

கடையில் விசு, மூர்த்தி, மோகனசந்தரம் ஆகிய 3 பேர் விற்பனையாளர்களாக பணி புரிகிறார்கள்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி அன்று மதுக்கடை மூடப்பட்டது. கடையை மூடி கொண்டு உள்ளே சூப்பர்வைசர் உள்பட 4 பேர் இருந்தனர்.

அப்போது மாலை 4 மணிக்கு அதேபகுதியை சேர்ந்த காளிமுத்து, ஏசுதாஸ் ஆகிய 2 பேர் வந்தனர். அவர்கள் மதுக்கடை கதவை தட்டினர்.

உள்ளே இருந்த ஊழியர்கள் வெளியே வந்தனர். அவர்களிடம் வந்த 2 பேர் ‘‘எங்களுக்கு 25 பெட்டி பிராந்தி வேண்டும்’’ என்று கேட்டனர். அதற்கு ஊழியர்கள் ‘‘இன்று மது விற்பனை கிடையாது. தர மாட்டோம்’’ என்று கூறினர்.

இதைத்தொடர்ந்து அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேற்பார்வையாளர் ஜோதிலிங்கம் கதவு ‌ஷட்டரை வேகமாக இழுத்து மூடினார். அப்போது கதவு இடுக்கில் அவரது கை மாட்டி காயம் ஏற்பட்டது.

இது குறித்து சூப்பர் வைசர் ஜோதிலிங்கம் கோபி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்குப்பதிவு செய்து காளிமுத்து, எசுதாஸ் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
Tags:    

Similar News