செய்திகள்

8 வழிச்சாலை எதிர்ப்பு போராட்டத்தில் மக்கள் மீது தாக்குதல் - தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

Published On 2018-08-10 12:17 IST   |   Update On 2018-08-10 12:17:00 IST
பசுமை வழிச்சாலைத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும்போது மக்கள் தாக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யும்படி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #ChennaiSalemHighway #MadrasHC
சென்னை:

சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும்போது எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். நிலம் கையகப்படுத்தப்படும்போது தடுத்து நிறுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டனர். சில இடங்களில் போராட்டம் நடத்தியவர்கள் போலீசாரால் தாக்கப்பட்டனர்.



இந்நிலையில், நிலம் கையகப்படுத்தும்போது தாக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி வழக்கறிஞர் ரத்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கூறியிருந்தார். அவரது மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம், தமிழக அரசு 4 வாரத்தில் பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டது. #ChennaiSalemHighway #MadrasHC
Tags:    

Similar News