செய்திகள்

அ.தி.மு.க. அரசின் சாதனைகளை மக்கள் அறியும் வகையில் சைக்கிள் பேரணி- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Published On 2018-08-06 10:42 GMT   |   Update On 2018-08-06 10:42 GMT
அ.தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துச்சொல்லும் வகையில் அம்மா பேரவை சார்பில் விருதுநகர் முழுவதும் 1000 சைக்கிள்களில் பிரசார பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி தலைமையில் சைக்கிள் பேரணி மற்றும் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் பணிக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் ராதா கிருஷ்ணன் எம்.பி, சந்திரபிரபாமுத்தையா எம்.எல்.ஏ., மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வ சுப்பிரமணியராஜா, மகளிரணி இணைச் செயலாளர் சக்திகோதண்டம், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் நல்லாட்சியை சிறப்பாக நடத்திவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையிலான அம்மாவின் அரசு சாதனைகளை மக்களிடத்தில் எடுத்துச்சொல்லும் வகையில் அம்மா பேரவை சார்பில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் 1000 சைக்கிள்களில் பிரச்சார பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வருகிற 13-ந்தேதி சாத்தூரில் சைக்கிள் பேரணி தொடக்க விழா நடக்கிறது. அரசின் சாதனைகளை எடுத்துரைத்து அங்கு அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது.

தொடர்ந்து ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை தொகுதிகளில் சுற்றுப் பயணம் செய்யும் சைக்கிள் பேரணி அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்க உள்ளது. பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டம் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் சிவகாசி புதுப்பட்டிகருப்பசாமி, சாத்தூர்சண்முகக்கனி, தேவதுரை, வெம்பக்கோட்டை கிழக்குஎதிர் கோட்டை மணிகண்டன், ஸ்ரீவில்லிபுத்தூர்மயில் சாமி, ராஜபாளையம் மேற்கு குருசாமி, விருதுநகர் மூக்கையா, நகர செயலாளர்கள் சிவகாசி அசன்பதூரூதீன், திருத்தங்கல் பொன்சக்திவேல், ஸ்ரீவில்லிபுத்தூர் பால சுப்பிரமணியன், ராஜபாளையம் பாஸ்கரன், சாத்தூர் வாசன், விருதுநகர் நயினார் முகமது, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணை செயலாளர் சேது ராமா னுஜம், விருதுநகர் முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் மூக்கையா, வத்ராப் ஒன்றிய செயலாளர் சுப்புராஜ், பேரூராட்சி செயலாளர் அய்யனார், உள்பட அனைத்து பிரிவு சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News