செய்திகள்

வில்லியனூர் அருகே கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2018-08-06 10:13 GMT   |   Update On 2018-08-06 10:13 GMT
வில்லியனூர் அருகே மதுபழக்கத்தை மனைவி கண்டித்ததால் கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி:

வில்லியனூர் அருகே கூடப்பாக்கம்- தர்மாபுரி மெயின் ரோட்டை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 42). கட்டிட தொழிலாளி. இவருக்கு சாந்தி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மது குடிக்கும் பழக்கம் உள்ள சிவக்குமார் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வந்தார்.

மேலும் வேலைக்கு சென்றாலும் சம்பள பணத்தை வீட்டு செலவுக்கு கொடுக்காமல் மது குடித்து செலவழித்து வந்தார். இதனை அவ்வப்போது சாந்தி தட்டிக்கேட்கும் போது இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும்.

அதுபோல் நேற்று முன்தினம் சிவக்குமார் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்தபோது, கணவன்- மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் விரக்தி அடைந்த சிவக்குமார் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டின் அருகில் உள்ள ஒரு மரத்தில் மனைவியின் சேலையால் அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தணிகாசலம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதேபோல் பாகூர் அருகே குருவி நத்தம் பிடாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தெய்வசிகாமணி (71). இவர் வயது முதிர்ச்சியினாலும், நோய் கொடுமையாலும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் படுக்கை அறையில் கயிற்றால் மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் பாகூர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சபரி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News