செய்திகள்

அய்யலூர் சந்தையில் தக்காளி வரத்து குறைந்த நிலையிலும் விலை வீழ்ச்சி

Published On 2018-08-06 10:01 GMT   |   Update On 2018-08-06 10:01 GMT
அய்யலூர் சந்தையில் தக்காளி வரத்து குறைந்த நிலையிலும் விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.
வடமதுரை:

திண்டுக்கல் அருகே உள்ள அய்யலூரில் தக்காளி சந்தை நடத்தப்பட்டு வருகிறது. வடமதுரை, அய்யலூர், பூசாரிநாயக்கன்பட்டி, மணியக்காரன்பட்டி, எரியோடு, கோம்பை, காக்கையன்குளத்துப்பட்டி, சித்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து தக்காளி விளைவிக்கப்பட்டு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி வெளியூர் வியாபாரிகளும் அதிக அளவில் வந்து இதனை வாங்கிச் செல்கின்றனர். கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து குறைவாகவே உள்ளது. பற்றாக்குறையை சமாளிக்க ஆந்திராவில் இருந்து அதிக அளவு தக்காளி வரவழைக்கப்பட்டு வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.

சராசரியாக தினசரி 10 டன் மற்றும் அதற்கும் கூடுதலாகவே தக்காளி கொண்டு வரப்படும். ஆனால் தற்போது ஒரு டன்னுக்கும் குறைவான அளவிலேயே விவசாயிகள் கொண்டு வருகின்னர். 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூ.140 முதல் ரூ.170 வரை விற்கப்படுகிறது.

கடும் வறட்சியான சூழலிலும் குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி சாகுபடி செய்த தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

Tags:    

Similar News