செய்திகள்

தேவகோட்டையில் அதிமுக சைக்கிள் பேரணி- அமைச்சர் உதயகுமார் தொடங்கி வைத்தார்

Published On 2018-08-05 14:40 GMT   |   Update On 2018-08-05 14:40 GMT
தேவகோட்டையில் தமிழக அரசின் சாதனையை விளக்கி அ.தி.மு.க. சைக்கிள் பேரணி தொடக்க விழா நடைபெற்றது. பேரணியை அமைச்சர் உதயகுமார் தொடங்கி வைத்தார்.

தேவகோட்டை:

தேவகோட்டையில் தமிழக அரசின் சாதனையை விளக்கி அ.தி.மு.க. சைக்கிள் பேரணி தொடக்க விழா நடைபெற்றது. அ.தி.மு.க அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் தெரிவிக்கும் வகையில் ஜெயலலிதா பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் சைக்கிள் பேரணி நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக மதுரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

தற்போது 2-ம் கட்டமாக சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை சிலம்பனி விநாயகர் கோவிலில் இருந்து சைக்கிள் பேரணி தொடங்கியது. அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், மாவட்ட பேரவை செயலாளர் அசோகன் வரவேற்றனர். பேரணியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.

இன்று காலை தேவகோட்டையில் இருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட சைக்கிளில் இளைஞர்கள் மற்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், மாவட்ட பேரவை செயலாளர் அசோகன் ஆகியோர் ராம்நகர் கண்ட தேவி, ஆறாவயல் வழியாக காரைக்குடியை நோக்கி சென்றனர்.

இந்த பேரணி சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை, காரைக்குடி, பிள்ளையார்பட்டி, திருப்பத் தூர், சிவகங்கை, மானா மதுரை சென்றடைகிறது.

இதில் தேவகோட்டை நகரச் செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் நகர் மன்ற துணைத்தலைவர் சுந்தரலிங்கம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இளைஞர் அணி செயலாளர் பிர்லா கணேசன், மாவட்ட தொழில் நுட்ப பிரிவு துணைச்செயலாளர் கணேசன் பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News