செய்திகள்

ஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் வீடியோ உண்மையானதுதான் - வெற்றிவேல் விளக்கம்

Published On 2018-08-02 04:03 GMT   |   Update On 2018-08-02 04:03 GMT
ஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் வீடியோ உண்மையானதுதான், மார்பிங் செய்யப்படவில்லை என்று டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரான வெற்றிவேல் விளக்கம் அளித்துள்ளார். #Vetrivel #JayalalithaaVideo
சென்னை:

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது ஜூஸ் குடிப்பது போன்ற வீடியோவை ஆர்.கே.நகர் தேர்தலின் போது டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரான வெற்றிவேல் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த வீடியோவை ஆணையத்தில் ஒப்படைக்காமல் நிருபர்கள் முன்னிலையில் வெளியிட்டது ஏன் என்று அப்போது ஆணையத்தின் செயலாளராக இருந்த பன்னீர்செல்வம் போலீசில் புகார் கொடுத்தார். உடனே வெற்றிவேல் முன்ஜாமீன் பெற்றதால் கைதாகவில்லை.

அதன் பிறகு அந்த வீடியோ 4 நாட்களில் விசாரணை ஆணையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த வீடியோ ஆணையத்தில் ஒப்படைக்கப்பட்டு 9 மாதம் ஆன நிலையில் அது மார்பிங் செய்யப்பட்டுள்ளதாக ஆணையத்தில் இருந்து தகவல் கசிந்தது.

இதற்கு வெற்றிவேல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-



ஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் வீடியோ வெளியிடப்பட்டு 9 மாதம் ஆகிறது. இது மார்பிங் செய்யப்பட்டது என்றால் என்னை கைது செய்திருக்க வேண்டுமே? ஏன் இதுவரை கைது செய்யவில்லை? அந்த வீடியோவை தடயவியல் சோதனைக்கும் அனுப்பவில்லை.

விசாரணை கமி‌ஷன் செயலாளர் கோமளா வீடியோ தொடர்பாக பொய் தகவலை பரப்பி மக்களை திசை திருப்புகிறார். அவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வேண்டப்பட்டவர்.

இந்த ஆணையம் தான் மார்பிங் செய்யப்பட்டுள்ளது. வீடியோ மார்பிங் செய்யப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். #Vetrivel #JayalalithaaVideo

Tags:    

Similar News