செய்திகள்

அய்யலூரில் பஸ் ஸ்டாப் குடிமகன்களால் மாணவ-மாணவிகள் அச்சம்

Published On 2018-08-02 08:33 GMT   |   Update On 2018-08-02 08:33 GMT
அய்யலூரில் பஸ் ஸ்டாப் குடிமகன்களால் மாணவ- மாணவிகள் அச்சமடைந்து வருகின்றனர்.
வடமதுரை:

திண்டுக்கல் - திருச்சி சாலையில் உள்ள அய்யலூரி செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் கோர்ட்டு உத்தரவுக்கு பிறகு அகற்றப்பட்டன. ஆனால் அதன் பின் பல்வேறு கடைகளிலும், மொபைல் பைக் மூலமும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் ஏற்கனவே கடை இருந்த பகுதியிலும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதால் இதனை கண்டித்து பொதுமக்கள் மதுபாட்டிலை உடைத்து போராட்டம் நடத்தினர். தற்போது பெரும்பாலான பஸ் ஸ்டாப்புகளை குடிமகன்கள் பாராக பயன்படுத்தி வருகின்றனர்.

காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளிக்கு செல்லும் போதும், வீடு திரும்பும் போது பஸ் ஸ்டாப்புகளில் மயங்கிய நிலையில் கிடக்கும் குடிமகன்களை பார்த்து மாணவிகள் அச்சமடைந்து உள்ளனர். 24 மணி நேரமும் மதுபானம் விற்கப்படுவதால் காலையிலேயே போதை தலைக்கேறிய நிலையில் அலங்கோலமாக கிடக்கின்றனர். எனவே இது போன்ற குடிமகன்கள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News