செய்திகள்

சென்னையில் நடைபெறும் பழமையான கார் கண்காட்சி

Published On 2018-08-03 17:11 IST   |   Update On 2018-08-03 17:11:00 IST
சென்னையில் பழமையான கார் கண்காட்சி சென்னையில் ஹெரிடேஜ் ஆட்டோ ஷோ என்ற பெயரில் வருகிற ஞாயிற்றுக் கிழமை, சென்னையில் நடைபெறவுள்ளது. #ChennaiHeritageAutoShow2018
சென்னை: 

சென்னையில் ஹெரிடேஜ் ஆட்டோ ஷோ 2018, 5.8.2018 அன்று ஞாயிற்றுக் கிழமை, சென்னை திருவான்மியூர் ஸ்ரீராமச்சந்திரா கன்வென்சன் சென்டரில் நடைபெறவுள்ளது.

இதில் பாமையான மற்றும் புராதனமான 140க்கும் மேற்பட்ட கார்களும் 35க்கும் மேற்பட்ட இரு சக்கர வண்டிகளும் பங்குபெற உள்ளது. இந் கண்காட்சியை 9 மணியளவில் திரைப்பட நடிகர் சத்யராஜ் துவக்கி வைக்கிறார். 

1920லிருந்து 1970 வரையில் புழக்கத்திலிருந்த ஜாக்குவார், எம்.ஜி, டாட்ஜ் பிரதர்ஸ், செவர்லேட், போர்டு, பீகட், ஆஸ்டன் மற்றும் மெர்சடிஸ் போன்ற புகழ் பெற்ற நிறுவனங்களின் வாகனங்கள் பங்கேற்க உள்ளன. 



எம்.ஜி.ஆர், ஏ.வி.மெய்யப்ப செட்டியார் உள்ளிட்டோர் பயன்படுத்திய பழமை வாய்ந்த கார்களும் கண்காட்சியில் இடம்பெறுகிறது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 1957 மாடல், டாட்ஜ் கிங்க்ஸ்வே காரும், ஏவிஎம் ஸ்டூடியோ நிறுவனர் ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் 1938 மாடல், வாக்டால் காரும், ஜெமினி ஸ்டூடியோ அதிபர் எஸ்.எஸ்.வாசனின் 1956 மாடல், வாக்டால் வெலாக்ஸ் காரும் இடம்பெறுகின்றன. 

இதில் சுமார் 140-க்கும் மேற்பட்ட பழமையான கார்களும், 35-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும் மக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இறுதியில் சிறந்த வாகனமாக தேர்வு செய்யப்படுபவைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட இருக்கிறது. #ChennaiHeritageAutoShow2018

Tags:    

Similar News