செய்திகள்

மணப்பாறை பகுதியில் குற்றசெயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- தேமுதிக வலியுறுத்தல்

Published On 2018-08-02 19:41 IST   |   Update On 2018-08-02 19:41:00 IST
மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தே.மு.தி.க நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது.
மணப்பாறை:

மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த  சிலமாதங்களாக நடைபெற்றுவரும் கொள்ளை மற்றும்வழிப்பறி சம்பவங்களை தடுத்திட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தே.மு.தி.க நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தே.மு.தி.க நிர்வாகிகள் கூட்டம் நடை பெற்றது. கட்சி அலுவலகத் தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு  ஒன்றியச் செய லாளர் சரவணன் தலைமை தாங்கினார். 

அவைத் தலைவர் சந்திர சேகர் வரவேற்றுப் பேசினார். மாவட்டக்கழகச் செயலாளர் வக்கீல்  கிருஷ்ணகோபால், மாவட்ட அவைத்தலைவர் பாரதிதாசன்  ஆகியோர் கூட்டத்தின் நோக்கம் குறித்துப் பேசினர். இதில் தே.மு.தி.க 14-ம் ஆண்டு கட்சி தொடக்க விழா, செப்டம்பர் 16- ல் திருப்பூர் மாநில மாநாடு,  தே.மு.தி.க நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள்விழா குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் மணப்பாறை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வழிப்பறி  மற்றும் கொள்ளை சம்ப வங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வரும் நிலையில் மக்கள் காவல் துறையினர் மீதான நம்பிக்கையை இழக்கும் நிலை உள்ளது. 

மேலும் இந்த சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதால் மக்கள் வெளியில் செல்லக் கூட அச்சப்படும் நிலை உள் ளதை  கருத்தில்  கொண்டு  சம்மந்தப்பட்ட  காவல்துறை உயர் அதிகாரிகள் விரைந்து  நடவடிக்கை எடுத்து குற்ற சம்பவங்களை தடுப்பதற் கான முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும்.

கடந்த ஒன்றரை ஆண்டிற் கும் மேலாக மணப் பாறை நகராட்சியில்  ஆணையர் இல்லாத  சூழல் நிலவிக் கொண்டிருக்கின்றது. இதனால்  திட்டப்பணிகள் தடைபட்டு நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு உடனடியாக ஆணையரை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர்கள் வேல் முருகன், வசந்த் பெரிய சாமி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் முல்லை சந்திர சேகர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பொருளாளர் குமார் நன்றி கூறினார்.
Tags:    

Similar News