செய்திகள்

யார் தவறு செய்திருந்தாலும் துறை ரீதியான நடவடிக்கை- உயர்கல்வித்துறை அமைச்சர் பேட்டி

Published On 2018-08-03 13:08 IST   |   Update On 2018-08-03 13:08:00 IST
விடைத்தாள் மறு மதிப்பீடு முறைகேடு விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார். #RevaluationScam #KPAnbazhagan
ஈரோடு:

ஈரோடு அருகே உள்ள அரச்சலூர் ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கலந்து கொண்டு தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறு மதிப்பீடு முறைகேடு விவகாரத்தில் முதல் கட்ட விசாரணையில் குற்றம் நிரூபணம் ஆகியுள்ளது. இதில் யார் தவறு செய்திருந்தாலும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த விவகாரத்தில் முழுமையாக ஆய்வு நடத்தி அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்படும். தவறு யார் செய்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவர் பாரபட்சம் பார்க்கமாட்டோம்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார். #RevaluationScam #TNMinister #KPAnbazhagan
Tags:    

Similar News