செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்- டிடிவி தினகரன்

Published On 2018-08-03 11:39 IST   |   Update On 2018-08-03 11:39:00 IST
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வரும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து புதுச்சேரியையும் சேர்த்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். #TTVDhinakaran #ParliamentElection
ஈரோடு:

ஈரோடு அடுத்த அரச்சலூர் ஓடாநிலையில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் விழா இன்று நடந்தது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று காலை ஓடா நிலையில் உள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்துக்கு வந்தார்.

பிறகு தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சுதந்திர போராட்ட வீரர்கள் என்றாலே கட்ட பொம்மன், புலித்தேவன், தீரன் சின்னமலை ஆகியோரின் பெயர்கள்தான் நம் நினைவுக்கு வரும்.

இன்று தீரன் சின்னமலை சிலைக்கு நான் மாலை அணிவித்து வணங்கியதால் மிகப்பெரிய பாக்கியசாலியாக என்னை கருதுகிறேன்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஒரு கூட்டணியாகவும், பாரதிய ஜனதா ஒரு கூட்டணியாகவும் போட்டியிட்டன. ஆனால் ஜெயலலிதா தனி ஒரு ஆளாக நின்று தேர்தலை சந்தித்து தமிழகத்தில் உள்ள 39 இடங்களிலும் மாபெரும் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

அதேபோல அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் வரும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து புதுச்சேரியையும் சேர்த்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமையாவிட்டால் சிறு சிறு கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.

எங்களை காங்கிரஸ் கூட்டணியில் சேருவீர்களா? என்று கேட்கின்றனர். காங்கிரசுடன் தி.மு.க. உள்ளது. பின்னர் எப்படி நாங்கள் காங்கிரஸ் கூட்டணியில் சேர முடியும்?

காங்கிரஸ் அணியை விட்டு தி.மு.க. வெளியே வரட்டும் பார்க்கலாம். மேலும் இப்போது தேர்தல் வியூகத்துக்கு எல்லாம் பதில் கூற முடியாது.

தமிழ்நாட்டில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது.

70 சதவீத மக்கள் ஆதரவு எங்களுக்கு உள்ளது. அ.தி.மு.க.வில் உள்ள உண்மையான தொண்டர்கள் 90 சதவீதம் பேர் எங்களுடன் தான் உள்ளனர்.


தமிழ்நாட்டில் சிலை கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேலை நிராகரித்து விட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதற்கு சி.பி.ஐ. விசாரணை கோரும் இவர்கள் ஏன் செய்யாதுரை வீட்டில் நடந்த சோதனையில் பல கோடி பணம் கைப்பற்றினார்கள்? அதுபற்றியும் மேலும் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு குறித்து ஏன் சி.பி.ஐ. விசாரணை கோரவில்லை?

தற்போது முதல்-அமைச்சர் பேசி உள்ள ஒரு வீடியோவில் அரசு ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளை ஒருமையில் பேசி உள்ளார். இவரைபோலதான் இவரது கட்சி தொண்டர்களும் உள்ளனர்.

ஈரோட்டில் அரசு அதிகாரியை அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் மிரட்டி உள்ளார். இப்படிதான் அவரது கட்சி தொண்டர்கள் உள்ளனர். முதல்வர் எடப்பாடி ரூ. 4 ஆயிரம் கோடி டெண்டரை தனது நெருங்கிய சொந்தக்காரருக்கு கொடுத்து ஏன்?

இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறினார். #TTVDhinakaran #ParliamentElection
Tags:    

Similar News