செய்திகள்

மஞ்சூர் அருகே காட்டெருமை தாக்கி தொழிலாளி படுகாயம்

Published On 2018-08-01 16:49 IST   |   Update On 2018-08-01 16:49:00 IST
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே காட்டெருமை தாக்கியதில் தொழிலாளி படுகாயமடைந்தார். இச்சம்பவம் அப்பகுயில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மஞ்சூர்:

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள குறிஞ்சி நகரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம் (65) தேயிலை தோட்ட கூலி தொழிலாளி. இவர் அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது தேயிலை செடிகளை ஒட்டி புதரில் மறைந்திருந்த காட்டெருமை ஒன்று பாலசுப்ரமணியத்தை நோக்கி ஓடி வந்ததுடன் அவரை கொம்புகளால் குத்தி கீழே தள்ளியது.

இதில் பாலசுப்ரமணியத்தின் இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் அலறி துடித்தவரை அக்கம் பக்கத்தார் மீட்டனர். மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் குந்தா வனச்சரகர் சரவணன் தலைமையில் வனக்காப்பாளர் ஜெய்கணேஷ் மற்றும் வனத்துறையினர் விசாரனை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News