செய்திகள்

போடி அருகே தனியார் நிலத்தில் கொட்டப்பட்ட 12 டன் கேரள மருத்துவ கழிவுகள்

Published On 2018-07-28 14:29 IST   |   Update On 2018-07-28 14:29:00 IST
போடி அருகே தனியார் நிலத்தில் கொட்டப்பட்ட 12 டன் கேரள மருத்துவ கழிவுகள்
மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடி அருகே சங்கராபுரத்தில் இருந்து குச்சனூர் செல்லும் பாதையில் ஏராளமான விளை நிலங்கள் உள்ளன. இங்கு மானாவாரி சாகுபடி மூலம் விவசாயிகள் விளைநிலங்களில் காய்கறி மற்றும் நிலக்கடலை பயிரிட்டு வருகிறார்கள்.

எனவே இந்த பகுதி எப்போதும் பசுமையாக காட்சி தரும்.

இந்த பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டது. இந்த தகவல் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு தெரிய வந்தது. துர்நாற்றம் வீசியதால் அங்குள்ளவர்கள் திரண்டனர். இது குறித்து உடனடியாக சுகாதார அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த இடம் அமிர்தம்மாள் என்பவருக்கு சொந்தமானது இவர் கேரளாவில் உள்ளார். இவரது இடததில்தான் 12 டன் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. இதனை எதற்காக இங்கு வந்து மர்ம நபர்கள் கொட்டினர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மருத்துவ கழிவு ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் பின்னர் இது எந்த வகையை சேர்ந்தது என தெரிய வரும்.

இது குறித்து அந்த பகுதியில் உள்ளவர்கள் கூறுகையில், மருத்துவ கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே கிராம மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாய நிலை உருவாகியுள்ளது.

இந்த வி‌ஷயத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு மருத்துவ கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News