செய்திகள்

தா.பாண்டியனுக்கு மூச்சுத்திணறல் - சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதி

Published On 2018-07-28 13:19 IST   |   Update On 2018-07-28 13:19:00 IST
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு இன்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து உடனடியாக அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #DPandianHospitalised
சென்னை:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன். முன்னாள் எம்.பி.யும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் முன்னாள் செயலாளருமான இவர், இன்று சென்னையில் இருந்தபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அதன்பின்னர் தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதேபோல் கடந்த ஆண்டும் தா.பாண்டியனுக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டு, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.



நேற்று தி.மு.க  தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த தா.பாண்டியன், கருணாநிதி விரைவில் நலம் பெறுவார்  என்றும் தமிழ் உள்ளவரை அவர் வாழ்வார் என்றும் நம்பிக்கை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. #DPandianHospitalised
Tags:    

Similar News