செய்திகள்

கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள்

Published On 2018-07-28 06:43 GMT   |   Update On 2018-07-28 06:43 GMT
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் இன்று சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்து, கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். #KarunanidhiUnwell #KauveryHospital #CongressLeaders
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் உடல்நிலை மோசமானதையடுத்து மீண்டும் காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஐசியு வார்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது ரத்த அழுத்தம் சீரடைந்து உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதியின் உடல்நலம் பற்றி தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் எதிர்மறையான செய்திகள் பரவி வரும் நிலையில், பல்வேறு தலைவர்களும் காவேரி மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்து வருகின்றனர். அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என்றும் பிராத்தனை செய்வதாக கூறியுள்ளனர். கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று மருத்துவமனைக்கு சென்று, கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோர் டெல்லியில் இருந்து இன்று காலை சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்தனர். மருத்துவமனையில் கருணாநிதியின் உடல் நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தனர்.



இதேபோல்,  ஆடிட்டர் குருமூர்த்தியும் மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தார். #KarunanidhiUnwell #KauveryHospital #CongressLeaders

Tags:    

Similar News