செய்திகள்

ஊட்டியில் சிறுத்தைகளை பிடிக்க கூண்டு: கலெக்டர் பார்வையிட்டார்

Published On 2018-07-26 15:19 GMT   |   Update On 2018-07-26 15:19 GMT
ஊட்டியில் வன ஊழியர் உள்பட 2 பேரை தாக்கிய சிறுத்தைகளை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் பார்வையிட்டார்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தூனேரி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் உள்ளது. இங்கு கூடலூர் தேவாலாவை சேர்ந்த வேல்முருகன் (வயது 38) உள்பட 6 தொழிலாளர்கள் பச்சை தேயிலையை பறிக்கும் பணியில் நேற்று மதியம் ஈடுபட்டனர். 

அப்போது சிறுத்தை ஒன்று திடீரென்று அங்கு வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர். ஆனால் அந்த சிறுத்தை வேல்முருகனை விரட்டிச்சென்று தாக்கியது. தலையில் லேசான காயம் அடைந்த வேல்முருகன் சிகிச்சைக்காக தூனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்த தகவலின் பேரில் வனச்சரகர் முத்துகிருஷ்ணன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள், அந்த சிறுத்தை தேயிலை தோட்டத்தில் பதுங்கி உள்ளதா? என்று ஆய்வு செய்தனர். அப்போது தேயிலை தோட்டத்தில் 2 குட்டிகளுடன் சிறுத்தை இருந்தது. இதை பார்த்து வனத்துறையினர் சிறுத்தையை விரட்ட முயன்றனர். இதனால் ஆவேசம் அடைந்த சிறுத்தை வனவர் திருமூர்த்தியை (35) தாக்கிவிட்டு குட்டியுடன் தப்பி சென்றது. இதில் அவருக்கு முதுகிலும், தலையிலும் லேசான காயம் ஏற்பட்டது. 

இதையடுத்து வனத்துறையினர் திருமூர்த்தியை மீட்டு தூனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 2 பேரை சிறுத்தை தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே சிறுத்தை தாக்கியதில் காயம் அடைந்த வேல்முருகனை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Tags:    

Similar News