செய்திகள்
குப்பை சேகரிக்க வாங்கப்பட்டுள்ள பேட்டரி ஆட்டோக்கள்

பெருங்களத்தூர் பேரூராட்சியில் குப்பை சேகரிக்க பேட்டரி ஆட்டோ

Published On 2018-07-26 15:26 IST   |   Update On 2018-07-26 15:26:00 IST
தமிழகத்தில் உள்ள பேரூராட்சிகளில் முதல் முறையாக குப்பைகளை சேகரிக்க பெருங்களத்தூரில் பேட்டரியால் இயங்கும் 3 ஆட்டோக்கள் வாங்கப்பட்டுள்ளது.
தாம்பரம்:

தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பேரூராட்சியில் தெருக்களில் தேங்கி கிடக்கும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து எடுக்க பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர சைக்கிள்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பேரூராட்சிகளில் முதல் முறையாக குப்பைகளை சேகரிக்க பெருங்களத்தூரில் பேட்டரியால் இயங்கும் 3ஆட்டோக்கள் வாங்கப்பட்டுள்ளது.

சுமார் ரூ.6.30 லட்சம் செலவில் வாங்கப்பட்டுள்ள இந்த வண்டிகளில் 500 கிலோ குப்பைகளை ஏற்றி செல்ல முடியும்.

மேலும் குறுகிய சாலைகளில் வாகனத்தை இயக்க முடியும். இந்த பேட்டரி ஆட்டோக்களால் பெட்ரோல், டீசல் செலவு மிச்சமாகும்.

இந்த பேட்டரி ஆட்டோக்களின் சேவைகளை காஞ்சீபுரம் பேரூராட்சி இயக்குனர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது பேரூராட்சி உதவி இயக்குனர் சாந்தகுமார், உதவி செயற்பொறியாளர் மனோகரன், பெருங்களத்தூர் செயல் அலுவலர் (பொறுப்பு) குணசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர். #Tamilnews
Tags:    

Similar News