செய்திகள்

மின்வாரிய ஊழியர் வி‌ஷம் குடித்து தற்கொலை- போலீசார் அவதூறாக பேசி மிரட்டியதாக உறவினர்கள் புகார்

Published On 2018-07-24 10:38 GMT   |   Update On 2018-07-24 10:38 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வாகன சோதனையின் போது போலீசார் அவதூறாக பேசி மிரட்டியதால் மின்வாரிய ஊழியர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.
விருதுநகர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி போலீஸ் சரகத்திற்குட்பட்ட எஸ்.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கபுஷ்பம். இவரது மகன் பெரியசாமி (வயது 24). இவர் சிவகாசியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலையை முடித்துவிட்டு பெரியசாமி மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்படடார்.

அப்போது சிவகாசி போலீசார் பெரியசாமியை மறித்து ஆவணங்களை கேட்டனர். ஆனால் அவரிடம் சரியான ஆவணங்கள் இல்லை என தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்ததோடு மறுநாள் ஆவணங்களை சமர்ப்பித்து மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தி அனுப்பினர்.

இந்த நிலையில் நேற்று வேலைக்குச் செல்லாமல் பெரியசாமி வீட்டில் இருந்தார். விரக்தியுடன் காணப்பட்ட அவர் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மல்லி போலீசார் பெரியசாமி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் வாகன சோதனையின் போது போலீசார் பெரியசாமியை அவதூறாக பேசி மிரட்டியிருக்கிறார்கள். எனவே தான் அவர் தற்கொலை செய்துள்ளார் எனக்கூறி அவரது உறவினர்கள் புகார் கூறினர். மேலும் ஆஸ்பத்திரியில் உறவினர்கள் கூடியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். #tamilnews
Tags:    

Similar News