செய்திகள்

வெளிநாடுகளில் சொத்து குவிப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் 30-ந்தேதி ஆஜராக உத்தரவு

Published On 2018-07-23 15:16 IST   |   Update On 2018-07-23 15:16:00 IST
வெளிநாடுகளில் சொத்து குவித்தது தொடர்பான வழக்கில் ப.சிதம்பரம் குடும்பத்தினர் 30-ந்தேதி கண்டிப்பாக ஆஜராகும்படி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #PChidambaram
சென்னை:

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்திய மந்திரியாக இருந்த ப.சிதம்பரத்தின் மனைவி நளினி, மகன் கார்த்தி, மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் சொத்துக்கள் வாங்கியுள்ளனர். இந்த விபரங்களை 3 பேரும், தங்களது வருமான வரிக் கணக்கில் காட்டவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு எழும்பூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.

நீதிபதி மலர்விழி முன்பு இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில் வக்கீல்கள் ஆஜராகி, 3 பேரும் ஆஜராக விலக்கு அளிக்க கோரி மனு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, விசாரணையை வருகிற 30-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். அன்று 3 பேரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். #PChidambaram
Tags:    

Similar News