செய்திகள்

கோட்டூர்புரத்தில் கூவம் ஆற்றில் குதித்து கல்லுரி மாணவி தற்கொலை

Published On 2018-07-21 11:35 IST   |   Update On 2018-07-21 11:35:00 IST
சென்னை கோட்டூர்புரம் பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவான்மியூர்:

கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் ரம்யா. அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

நேற்று இரவு ரம்யா கோட்டூர்புரம் பாலத்துக்கு வந்தார். திடீரென்று பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் குதித்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆற்றில் ரம்யாவை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இருட்டிவிட்டதால் தேடும் பணியில் சிரமம் ஏற்பட்டது.

இன்று காலை கூவம் ஆற்றில் ரம்யாவை தேடும் பணி நடந்தது. அப்போது அடையாறு ஆற்றில் இருந்து ரம்யா பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலை படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.

அப்போது அங்கு நின்றிருந்த உறவினர்கள் கதறி அழுதனர். ரம்யா உடல் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து கோட்டூர்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கல்லூரி மாணவி ரம்யா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். #Tamilnews
Tags:    

Similar News