செய்திகள்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.72 லட்சம் உண்டியல் காணிக்கை

Published On 2018-07-20 18:56 IST   |   Update On 2018-07-20 18:56:00 IST
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ. 72 லட்சம் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மண்ணச்சநல்லூர்:

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளியிடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். அப்படி வரும் பக்தர்கள் உண்டியல்களில் செலுத்தப்படும் காணிக்கைகள் மாதம் இரு முறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இந்த மாதம் 4-ந் தேதி எண்ணப்பட்டது. தற்போது 2-வது முறையாக காணிக்கை எண்ணும் பணி கோவில் இணை ஆணையர் குமரதுரை, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை திருச்சி உதவி ஆணையர் ராணி, கரூர் உதவி ஆணையர் சூர்ய நாராயணன், மண்ணச்சநல்லூர் பகுதி கோவில் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டன. 

இதில், காணிக்கையாக ரூ.72 லட்சத்து 24 ஆயிரத்து 121 ரொக்கமும், 2 கிலோ 200 கிராம் தங்கமும், 9 கிலோ 150 கிராம் வெள்ளியும் கிடைத்தன. மேலும், வெளிநாட்டு பணம் 289-ம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்து கொண்டிருந்தபோது சென்னையை சேர்ந்த விஜயகுமார் என்ற பக்தர் சுமார் 3 அடி உயரம் உள்ள 3 கிலோ 200 கிராம் எடையுள்ள 2 வெள்ளி குத்துவிளக்குகளை கோவிலுக்கு காணிக்கையாக வழங்கினார்.
Tags:    

Similar News