செய்திகள்

பள்ளி தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்த மாணவன் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் - எடப்பாடி பழனிசாமி உத்தரவு

Published On 2018-07-18 23:28 GMT   |   Update On 2018-07-18 23:28 GMT
விழுப்புரம் அருகே பள்ளி தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், மேல்அருங்குணம் கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கத்தின் மகன் சிவராமன், 18-ந் தேதியன்று காலை (நேற்று) செஞ்சி வட்டத்தில் அமைந்துள்ள பள்ளி வளாகத்தில் கட்டுமானப்பணிக்காக கட்டப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிர் இழந்தார்.



இந்த செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். இந்த துயரச்சம்பவத்தில் உயிர் இழந்த மாணவன் சிவராமனின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். சிவராமனின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News