செய்திகள்
உத்தனப்பள்ளி அருகே லாரி மோதி 2 பேர் பலி
உத்தனப்பள்ளி அருகே லாரி மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள பெரியலட்சுமிபுரத்தை சேர்ந்த சென்றாயன் என்பவருடைய மகன் சங்கர் (வயது 23). டிராக்டர் டிரைவர். உத்தனப்பள்ளியை சேர்ந்த நரசிங்கப்பா என்பவருடைய மகன் பிரேம்குமார் (22). கூலித்தொழிலாளி. சங்கரும், பிரேம்குமாரும் நண்பர்கள். நேற்று அவர்கள் இருவரும் ஓசூரில் இருந்து உத்தனப்பள்ளி நோக்கி மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
மோட்டார்சைக்கிளை சங்கர் ஓட்டினார். பிரேம்குமார் பின்னால் அமர்ந்திருந்தார். உத்தனப்பள்ளி அருகே சானமாவு என்ற இடத்தில் சென்ற போது எதிரே வந்த லாரி, மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த உத்தனப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் இருவருடைய உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி மோதி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.