செய்திகள்

இந்து சத்யசேனா தலைவரை கொல்ல முயற்சி - கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்

Published On 2018-07-02 15:48 IST   |   Update On 2018-07-02 15:48:00 IST
இந்து சத்யசேனா தலைவரை கொலை செய்ய முயற்சி நடைபெற்றதாக போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தூர்:

சென்னை ஓட்டேரி ஒத்தவாடை தெருவில் அகில இந்திய இந்து சத்ய சேனா அமைப்பு உள்ளது. இதன் தேசிய தலைவர் வசந்த குமார் ஜி.

இவருக்கு தொலைபேசியில் அடிக்கடி கொலை மிரட்டல் வந்தது. கடந்த 27-ந்தேதி இரவு 10 மணி அளவில் அவர் தனது அலுவலகம் முன்பு நின்று கொண்டிருந்தார்.

அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 2 பேர் அவரை நோக்கி மோதுவது போல வந்தனர். எனவே இதில் இருந்து தப்பிக்க வசந்த குமார் ஜி அங்கிருந்து நகர்ந்தார். அப்போது திடீரென்று ஆட்டோ அவர் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அவரது கால் உடைந்தது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று இந்து சத்யசேனா நிர்வாகிகள் அலுவலகம் முன்பு நின்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் உங்கள் தலைவரை ஒழுங்காக இருக்கச் சொல்லுங்கள் என்று மிரட்டி விட்டு தப்பிச் சென்றுவிட்டார்.

இந்த மிரட்டல் குறித்து சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் வசந்தகுமார் ஜி புகார் செய்தார். மர்ம வாலிபர் மிரட்டல் விடுத்த வீடியோவையும் கமி‌ஷனர் அலுவலகத்தில் ஒப்படைத்தார். அதை வைத்து போலீசார் மிரட்டல் விடுத்த நபரை தேடி வருகிறார்கள். வசந்த குமார் ஜி-க்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. #Tamilnews

Tags:    

Similar News