செய்திகள்

மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி: மாணவிகள் உள்பட 90 பேர் பங்கேற்பு

Published On 2018-06-25 16:14 GMT   |   Update On 2018-06-25 16:14 GMT
புதுக்கோட்டையில் நடந்த மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் மாணவிகள் உள்பட 90 பேர் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட நீச்சல் கழகத்தின் சார்பில் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி நேற்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஏ.வி.எம்.கார்த்திக் தலைமை தாங்கினார். மாவட்ட விளையாட்டு அதிகாரி வாஞ்சிநாதன் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 50 மாணவிகள் உள்பட 90 பேர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகள் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியே பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்டது.

தொடர்ந்து ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதேபோல போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த போட்டியை மாணவ, மாணவிகள், மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நீச்சல் கழக தலைவர் ராஜமாதா ரமாதேவி, செயலாளர் முருகப்பன், பொருளாளர் குணசேகரன் உள்பட பலர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News