செய்திகள்

பரமக்குடியில் கார் கண்ணாடி உடைப்பு, கடையில் செல்போன்கள் கொள்ளை

Published On 2018-06-25 12:22 GMT   |   Update On 2018-06-25 12:22 GMT
கார் கண்ணாடியை அடித்து உடைத்ததோடு 10 செல்போன்களை எடுத்துச்சென்றதாக 9 பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்:

பரமக்குடி மரைக்காயர் பட்டிணத்தைச் சேர்ந்தவர் குமரேசபாண்டியன் (வயது 65), செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று இவர் உறவினர் குமார் (46)என்பவருடன் கடையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது காரில் வந்த கும்பல் கல்வீசி கடையை தாக்கியதாகவும், கடைக்குள் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான 10 செல்போன்களை எடுத்துச் சென்றதாகவும் பரமக்குடி டவுன் போலீசில் குமரேசபாண்டியன் புகார் செய்தார்.

மேலும் அந்த கும்பல் கடையின் முன்பிருந்த தனது கார் கண்ணடிகளை அடித்து உடைத்து சேதப்படுத்தியதாகவும், மொத்த சேத மதிப்பு ரூ.8 லட்சம் என்றும் புகாரில் தெரிவித்துள்ளார்.

குமரேசபாண்டியனுக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் வருவாய் ஆய்வாளர் கோகுல்நாத் என்ற கணேசுக்கும் சுவர் தொடர்பாக விரோதம் இருந்துள்ளது.

இந்த முன்விரோதத்தில் கோகுல்நாத், சரவணன், சென்னை தலைமை செயலக கண்காணிப்பாளர் நளினி, மங்கையர்கரசி, நாகநாதன், சேதுராமன், ரத்தினவேல்பாண்டி, அனீஷ், சவுந்தரவள்ளி ஆகியோர் தாக்குதலில் ஈடுபட்டதாக பரமக்குடி டவுன் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News