செய்திகள்

திருமங்கலம் அருகே மாவட்ட அளவிலான கபடி போட்டி - ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்

Published On 2018-06-25 11:24 GMT   |   Update On 2018-06-25 11:24 GMT
திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில் மாவட்ட அளவிலான கபடி போட்டியினை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.

பேரையூர்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில் மாவட்ட அளவிலான கபடி போட்டியினை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார் இந்த போட்டியில் 73 அணிகள் பங்கேற்கின்றன.

திருமங்கலம் அருகே சாத்தங்குடியில் தினேஷ் ராஜா முதலாமாண்டு நினைவு கோப்பைக்கான கபடி போட்டி இள மருது அணி சார்பில் தொடங்கியது.

திருமங்கலம் சாத்தங்குடி நாட்டாமங்கலம் உசிலம்பட்டி திருப்பரங்குன்றம் அவனியாபுரம் அலங்காநல்லூர் நடு முதலைக்குளம் விக்கிரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து 73 அணிகள் பங்கேற்றன. மாவட்ட அளவிலான கபடி போட்டியினை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று தொடங்கி வைத்தார்.

கபடி போட்டிகள் 2 நாட்கள் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு சுழற்கோப்பையும் ரொக்கப்பணம் ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் இந்த போட்டியினை சுற்று வட்டார கிராம மக்கள் கண்டுகளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன், முன்னாள் யூனியன் சேர்மன் தமிழழகன், ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திருப்பதி, முன்னாள் தொகுதிச் செயலாளர் ஆண்டிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News