செய்திகள்
செங்கல்பட்டு அருகே மணிப்பூர் பெண் தற்கொலை
செங்கல்பட்டு அருகே மணிப்பூர் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த ஆப்பூர், சேந்தமங்கலத்தில் வசித்து வந்தவர் மாசுபி (வயது25). மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த இவர் அதே பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வீட்டு வேலை பார்த்து வந்தார். இன்று காலை அவர் தங்கியிருந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.